காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி (வயது 78)... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 19-06-2025
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி (வயது 78) திடீர் உடல்நலக்குறைவால் கடந்த 15-ந்தேதி டெல்லியில் உள்ள கங்காராம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சையை தொடர்ந்து அவர் வீடு திரும்பினார்.
இந்த நிலையில் 17-ந்தேதி அவருக்கு மீண்டும் உடல்நல பாதிப்பு ஏற்பட்ட நிலையில், காலை 10 மணி அளவில் அவர் அதே ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சென்றார். அவருக்கு டாக்டர்கள் அமிதாப் யாதவ், டாக்டர் நந்தினி ஆகியோர் சிகிச்சை அளித்தனர். இந்த நிலையில், மருத்துவமனையில் இருந்து சோனியா காந்தி தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
Update: 2025-06-19 11:43 GMT