இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 19-06-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;

Update:2025-06-19 09:36 IST


Live Updates
2025-06-19 14:32 GMT

மேற்கு வங்காளத்தின் காளிகஞ்ச் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 69.85 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர்.

2025-06-19 14:13 GMT

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை, ராமநாதபுரம், நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025-06-19 13:42 GMT

இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் டோனி பிளேர், டெல்லி தலைமை செயலகத்தில் முதல்-மந்திரி ரேகா குப்தா மற்றும் மந்திரி மன்ஜிந்தர் சிங் சிர்சா ஆகியேரை இன்று நேரில் சந்தித்து பேசினார். அப்போது பிளேருக்கு, சிலை ஒன்றை ரேகா குப்தா பரிசாக வழங்கினார்.

2025-06-19 13:17 GMT

பீகாரில் ராஷ்டீரிய ஜனதா தள தலைவர் மற்றும் முன்னாள் முதல்-மந்திரியான தேஜஸ்வி யாதவ், ஐக்கிய ஜனதா தள மந்திரி அசோக் சவுத்ரி ஆகியோரின் வீடுகள் அமைந்த பகுதிக்கு அருகே போலோ சாலை பகுதியில் இன்று காலை 2 பேர் பைக்கில் வந்தனர். அவர்கள் இளைஞர் ஒருவரை நோக்கி திடீரென துப்பாக்கியால் சுட்டனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் பற்றி தேஜஸ்வி யாதவ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், அதிக பாதுகாப்பு நிறைந்த மண்டலங்களிலேயே, அரசால் பாதுகாக்கப்பட்ட குற்றவாளிகள் சுதந்திரத்துடன் சுற்றி திரிகிறார்கள். ராஜ் பவன், முதல்-மந்திரி வீடு, எதிர்க்கட்சி தலைவரின் வீடு, ஆகியோரின் வீடுகள் அமைந்த பகுதியில் வெளிப்படையாகவே துப்பாக்கி சூடு நடத்துகிறார்கள் என தெரிவித்து உள்ளார்.

2025-06-19 13:13 GMT

டி.என்.பி.எல். போட்டியில் சேலத்திற்கு எதிராக டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.

2025-06-19 12:19 GMT

சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், ஜூன் 24 மற்றும் 25 ஆகிய நாட்களில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.

காலை 9.30 மணி மற்றும் பிற்பகல் 3.30 மணி என இந்த 2 நாட்களில் 2 கட்டங்களாக சந்திப்பு நடைபெறும். இவற்றில், மாவட்ட செயலாளர்களுடன் மாவட்ட பொறுப்பாளர்களையும் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசுகிறார்.

2025-06-19 11:43 GMT

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி (வயது 78) திடீர் உடல்நலக்குறைவால் கடந்த 15-ந்தேதி டெல்லியில் உள்ள கங்காராம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சையை தொடர்ந்து அவர் வீடு திரும்பினார்.

இந்த நிலையில் 17-ந்தேதி அவருக்கு மீண்டும் உடல்நல பாதிப்பு ஏற்பட்ட நிலையில், காலை 10 மணி அளவில் அவர் அதே ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சென்றார். அவருக்கு டாக்டர்கள் அமிதாப் யாதவ், டாக்டர் நந்தினி ஆகியோர் சிகிச்சை அளித்தனர். இந்த நிலையில், மருத்துவமனையில் இருந்து சோனியா காந்தி தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

2025-06-19 11:03 GMT

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி, தேனி, கோவை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், விருதுநகர், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025-06-19 10:35 GMT

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அடுத்த மாதம் முதல் வாரத்தில் மீண்டும் தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கூட்டணி கட்சி தலைவர்களை சந்திக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2025-06-19 10:07 GMT

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் அரசு உதவி பெறும் பள்ளியில் 2 மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட போது, ஒரு மாணவர் கத்தியால் குத்தி உள்ளார். இதில் 10-ம் வகுப்பு பயிலும் மாணவர் சதீஷ்குமார் படுகாயம் அடைந்துள்ளார். கழுத்தில் படுகாயம் அடைந்த மாணவன் ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து ஆரணி நகர காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்