பீகாரில் ராஷ்டீரிய ஜனதா தள தலைவர் மற்றும் முன்னாள்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 19-06-2025

பீகாரில் ராஷ்டீரிய ஜனதா தள தலைவர் மற்றும் முன்னாள் முதல்-மந்திரியான தேஜஸ்வி யாதவ், ஐக்கிய ஜனதா தள மந்திரி அசோக் சவுத்ரி ஆகியோரின் வீடுகள் அமைந்த பகுதிக்கு அருகே போலோ சாலை பகுதியில் இன்று காலை 2 பேர் பைக்கில் வந்தனர். அவர்கள் இளைஞர் ஒருவரை நோக்கி திடீரென துப்பாக்கியால் சுட்டனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் பற்றி தேஜஸ்வி யாதவ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், அதிக பாதுகாப்பு நிறைந்த மண்டலங்களிலேயே, அரசால் பாதுகாக்கப்பட்ட குற்றவாளிகள் சுதந்திரத்துடன் சுற்றி திரிகிறார்கள். ராஜ் பவன், முதல்-மந்திரி வீடு, எதிர்க்கட்சி தலைவரின் வீடு, ஆகியோரின் வீடுகள் அமைந்த பகுதியில் வெளிப்படையாகவே துப்பாக்கி சூடு நடத்துகிறார்கள் என தெரிவித்து உள்ளார்.

Update: 2025-06-19 13:17 GMT

Linked news