சென்னையில் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 19-11-2025
சென்னையில் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
சென்னையில் சைதாப்பேட்டை, கோட்டூர்புரம், கே.கே.நகர், எம்ஜிஆர் நகர், சவுகார்பேட்டை, கீழ்ப்பாக்கம், கோடம்பாக்கம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 21 வாகனங்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள சைதன்யா அடுக்குமாடி குடியிருப்பில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த இரும்பு வியாபாரி நிர்மல் குமார் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
Update: 2025-11-19 03:57 GMT