இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 19-11-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
பட்டப்பகலில் ஏடிஎம் வாகனத்தை கடத்தி ரூ. 7 கோடி கொள்ளை - பெங்களூருவில் துணிகரம்
தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், ரு. 7 கோடியை கொள்ளையடித்து சென்ற கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இரவு 10 மணி வரை 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
இரவு 10 மணி வரை 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் கைது; சென்னையை சேர்ந்த மூதாட்டியிடம் ரூ.24 லட்சம் மோசடி - 3 பேர் கைது
தொழில்நுட்ப வளர்ச்சியால் நமது வாழ்வை எளிமையாக்கும் வகையில் பல்வேறு நவீன கண்டுபிடிப்புகள் நாள்தோறும் பயன்பாட்டிற்கு வந்து கொண்டிருக்கின்றன. அதே சமயம், தொழில்நுட்ப வளர்ச்சியை தவறான நோக்கத்துடன் பயன்படுத்தி, அப்பாவி மக்களிடம் இருந்து பணம் பறிக்கும் கும்பலும் மற்றொரு புறத்தில் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது.
சபரிமலை தரிசனத்திற்கு புதிய கட்டுப்பாடு; தேவசம்போர்டு அதிரடி அறிவிப்பு
சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக கடந்த 16-ந் தேதி நடை திறக்கப்பட்டது.
வங்கிகளின் அதிகாரபூர்வ இணையதள முகவரி பிரத்யேக டொமைனுக்கு மாற்றம்
வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்திய வங்கிகள் '.bank.in' என்ற பிரத்யேக டொமைனுக்கு மாறியுள்ளன.
பிரதமர் மோடியிடம் எடப்பாடி பழனிசாமி வைத்த கோரிக்கை என்ன..? வெளியான பரபரப்பு தகவல்
கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று பிரதமரிடம் எடப்பாடி பழனிசாமி மனு அளித்தார்.
மத்திய பா.ஜ.க. அரசைக் கண்டித்து மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் கோவை, மதுரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
'ஒரே ஜாதி, ஒரே மதம்': நடிகை ஐஸ்வர்யா ராய் பேச்சு
ஆந்திரப் பிரதேசத்தின் புட்டபர்த்தியில் நடைபெற்ற ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் பிறந்தநாள் விழாவில் ஐஸ்வர்யா ராய் பங்கேற்றார். நிகழ்வில் ஐஸ்வர்யா ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் பற்றிப் பேசினார்.
சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்களுக்காக புல்லு மேட்டுப்பாதையில் சிறப்பு ஏற்பாடுகள்
பக்தர்களின் பாதுகாப்பிற்காக துப்பாக்கி ஏந்திய வனத்துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பெண் குழந்தைக்கு தந்தையானார் நடிகர் பிரேம்ஜி - குவியும் வாழ்த்து
நடிகர் பிரேம்ஜிக்கும் அவரது காதலி இந்துவுக்கும் இடையே கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது.