ரஷிய அதிபருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 19-11-2025
ரஷிய அதிபருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு; மண்டல, உலகளாவிய விசயங்கள் பற்றி ஆலோசனை
ரஷியாவின் மாஸ்கோ நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் (எஸ்.சி.ஓ.) கலந்து கொள்வதற்காக மத்திய வெளிவிவகாரங்களுக்கான மந்திரி ஜெய்சங்கர் சென்றார். இந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு 17 மற்றும் 18 ஆகிய நாட்களில் நடந்தது.
இந்த பயணத்தின் ஒரு பகுதியாக அந்நாட்டு அதிபர் புதினை, மத்திய மந்திரி ஜெய்சங்கர் நேற்று நேரில் சந்தித்து பேசினார். அப்போது, இரு தலைவர்களும் மண்டல மற்றும் உலகளாவிய வளர்ச்சிக்கான பார்வைகளை பகிர்ந்து கொண்டனர்.
Update: 2025-11-19 04:03 GMT