காங்கிரஸ் கட்சி இளைஞர் அணி தலைவராக வர விஜய்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 19-11-2025
காங்கிரஸ் கட்சி இளைஞர் அணி தலைவராக வர விஜய் விரும்பினார்: கார்த்தி சிதம்பரம் எம்.பி.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பது, வேட்பாளர்களை தேர்வு செய்வது உள்ளிட்ட தீவிர பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த தேர்தலில், விஜய் தலைமையிலான த.வெ.க.வும் போட்டியிட தயாராகி வருகிறது. அதற்கேற்ப ஆட்சியில் பங்கு என அவர் அறிவித்தது, கூட்டணி கட்சிகளை தன்பக்கம் ஈர்ப்பதற்கான முயற்சியாக பார்க்கப்பட்டது. எனினும், தொடக்கத்தில் இருந்து, பா.ஜ.க.வை கொள்கை எதிரி என்றும் தி.மு.க.வை அரசியல் எதிரி என்றும் பேசி வருகிறார்.
Update: 2025-11-19 08:05 GMT