பரந்தூர் மக்களை சந்தித்தார் விஜய்..... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 20-01-2025
பரந்தூர் மக்களை சந்தித்தார் விஜய்.. போராட்டத்திற்கு ஆதரவு
பரந்தூரில் தவெக தலைவர் விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் பரந்தூர், ஏகனாபுரம், நெல்வாய் உள்ளிட்ட 13 கிராமங்களைச் சேர்ந்த மக்களை விஜய் சந்தித்தார். மக்கள் மத்தியில் பேசிய அவர் போராட்டத்திற்கு தனது முழு ஆதரவையும் தெரிவித்தார். தனது கள அரசியல் பயணம் பரந்தூர் மக்களின் ஆசீர்வாதத்துடன் தொடங்கியிருப்பதாகவும் அவர் கூறினார். பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
Update: 2025-01-20 07:13 GMT