எதிர்பார்ப்புகளற்ற அன்பு இல்வாழ்வை நல்வாழ்வாக்கும்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 20-08-2025
எதிர்பார்ப்புகளற்ற அன்பு இல்வாழ்வை நல்வாழ்வாக்கும் - இளைய தலைமுறையினருக்கு மு.க.ஸ்டாலின் அறிவுரை
50-வது திருமண நாளை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
அரைநூற்றாண்டாக என் வாழ்வின் துணையாக என்னில் பாதியாக துர்கா நுழைந்து, தன்னுடைய அன்பால் மணவாழ்வை மனநிறைவான வாழ்க்கையாக அளித்துள்ளார்! அவர் மீதான அளவற்ற அன்பே என் நன்றி!
எதிர்பார்ப்புகளற்ற அன்பும் விட்டுக்கொடுத்தலும் இல்வாழ்வை நல்வாழ்வாக்கும் என இளைய தலைமுறையினருக்குச் சொல்லிக் கொள்கிறோம்.
வீடும் நாடும் போற்றும் வாழ்வை அனைவரும் வாழ்ந்திட விழைகிறோம்!
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
Update: 2025-08-20 06:55 GMT