வரலாறு காணாத உச்சத்தில் முட்டை கொள்முதல் விலை..! -... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 20-11-2025
வரலாறு காணாத உச்சத்தில் முட்டை கொள்முதல் விலை..! - உயர்வுக்கு காரணம் என்ன.?
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 605 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில், நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டம், அதன் தலைவர் பொன்னி சிங்கராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முட்டை விலையை மேலும் 5 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதன் மூலம், முட்டை கொள்முதல் விலை 610 காசுகளாக அதிகரித்து உள்ளது. இதனால் நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 4-வது முறையாக வரலாறு காணாத வகையில், புதிய உச்சம் தொட்டுள்ளது.
Update: 2025-11-20 13:04 GMT