இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 20-11-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
தமிழ்நாட்டிற்கு பாஜக ஏதாவது சிறப்பு திட்டம் கொண்டுவந்துள்ளதா? - செந்தில்பாலாஜி கேள்வி
மெட்ரோ ரயில் திட்டம் கோவைக்கும் மதுரைக்கும் அவசியமானது என செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல்.2026: மும்பை இந்தியன்ஸ் அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த முன்னாள் வீரர்
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் அடுத்த மாதம் (டிசம்பர்) 16-ந் தேதி அபுதாபியில் நடக்கிறது. இதையொட்டி தக்கவைக்கப்படும் வீரர்கள் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை கடந்த 15-ந் தேதி மாலைக்குள் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் 10 அணிகளும் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டு இருந்தது.
நிதிஷ்குமாருக்கு தேஜஸ்வி யாதவ் வாழ்த்து
புதிய அரசாங்கம் தனது வாக்குறுதிகளையும் அறிவிப்புகளையும் பொறுப்புடன் நிறைவேற்றும் என நம்புவதாக தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
5 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை திரையரங்குகளில் வெளியாகும் 6 திரைப்படங்கள் (21-11-2025)
தமிழ் சினிமாவில் வெள்ளிக்கிழமை என்றாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். அதற்கு காரணம் வித்தியாசமான கதைகளில் ஒவ்வொரு வாரமும் புதிய திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அவை வெள்ளிக்கிழமையை மையமாக வைத்து வெளியிடப்படுகின்றன. அதற்கு காரணம் அடுத்த இரண்டு நாட்கள் விடுமுறை என்பதால் தான்.
ஊழலுக்காக, தமிழக விவசாயிகளுக்குத் தொடர்ந்து துரோகம் செய்யும் திமுக அரசு - அண்ணாமலை கண்டனம்
எந்த மாவட்டத்தில் எத்தனை சேமிப்புக் கிடங்குகள் அமைத்தீர்கள் என்பதற்கு வெள்ளை அறிக்கை வெளியிடத் தயாரா என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவை மாணவி மரணம்: 3 ஆசிரியர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு
கோவை மாவட்டம் வால்பாறை அருகே ஆசிரியர்கள் மீது குற்றம்சாட்டி 9ம் வகுப்பு படிக்கும் சிறுமி உயிரை மாய்த்துக்கொண்ட விவகாரம் தொடர்பாக, 3 ஆசிரியர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனை அடுத்து சிறுமியின் உடலை, குடும்பத்தினர் பெற்றுக்கொண்டனர்.
தூய்மை பணியாளர்களை இழிவுபடுத்தும் திமுக அரசு - எடப்பாடி பழனிசாமி கண்டனம்
ஊழியர்களுக்கு குப்பை வண்டியில் உணவு கொண்டு வரப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
“டூரிஸ்ட் பேமிலி” பட இயக்குனர் படத்தின் டைட்டில் டீசரை வெளியிடும் ரஜினி
‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் இயக்குநர் கதாநாயகனாக அறிமுகமாகும் புதிய படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது.
மகளிர் உலகக்கோப்பை கபடி: நடப்பு சாம்பியன் இந்திய அணி ஹாட்ரிக் வெற்றி
டாக்காவில் நடந்து வரும் மகளிர் உலகக்கோப்பை கபடியில் நடப்பு சாம்பியன் இந்திய அணி தனது முதல் 2 ஆட்டங்களில் முறையே உகாண்டா மற்றும் வங்காளதேசத்துக்கு எதிராக வெற்றி கண்டிருந்தது.