நெல்லை மாவட்டத்தில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 20-12-2024

நெல்லை மாவட்டத்தில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள் ஆபத்தானவை அல்ல.. கேரள அதிகாரி விளக்கம்

கேரளாவில் இருந்து கொண்டு வந்து நெல்லை மாவட்டத்தில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகளை அகற்றி கேரளாவுக்கு எடுத்து செல்லும்படி கேரள அரசுக்கு தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

இதையடுத்து கேரள சுகாதார துறை அதிகாரிகள் 7 பேர் கொண்ட குழு இன்று, நெல்லை மாவட்டத்தில் கழிவுகள் கொட்டப்பட்ட இடங்களை ஆய்வு செய்கின்றனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், நெல்லை மாவட்டத்தில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள் அபாயகரமானதாக இல்லை என்றும், தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவின்படி மருத்துவக் கழிவுகளை அகற்றுவது குறித்து கேரள அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறினர். 

Update: 2024-12-20 11:08 GMT

Linked news