இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 20-12-2024

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;

Update:2024-12-20 08:42 IST


Live Updates
2024-12-20 14:34 GMT

தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

2024-12-20 13:59 GMT

கோவையில் கருப்பு தின பேரணி.. பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கைது

கோவையில் பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் கருப்பு தின பேரணி நடைபெற்றது. கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தண்டனை பெற்ற அல் உம்மா பாஷாவின் இறுதி ஊர்வலத்திற்கு அனுமதி அளித்ததை கண்டித்து இந்த பேரணி நடைபெற்றது. பேரணியில் பங்கேற்ற தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.

2024-12-20 13:56 GMT

மழை முன்னறிவிப்பு

திருச்சி, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், சிவகங்கை, மதுரை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இரவு 10 மணி வரை லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், தருமபுரி, சேலம், திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024-12-20 12:22 GMT

பண மோசடி வழக்கில் ஜாமீனில் வந்த சில நாட்களில் செந்தில் பாலாஜியை மீண்டும் தமிழக அமைச்சராக நியமனம் செய்தது மிகவும் தவறு என சுப்ரீம் கோர்ட்டு கூறி உள்ளது. 

2024-12-20 11:56 GMT

ராஜஸ்தானில் எரிவாயு டேங்கர் லாரி விபத்து.. பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர்-அஜ்மீர் நெடுஞ்சாலையில் இன்று அதிகாலையில், சமையல் எரிவாயு நிரப்பப்பட்ட டேங்கர் லாரி, மற்றொரு லாரி மீது மோதியதால் பயங்கர விபத்து ஏற்பட்டது. எரிவாயு கசிந்து டேங்கர் லாரி வெடித்து சிதறி தீப்பிடித்தது,  அந்த லாரிக்கு அருகில் சென்ற பல வாகனங்கள் தீப்பற்றி எரிந்தன. இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. 43 பேர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.

இந்த விபத்தில் இறந்தவர்களின் உறவினர்களுக்கு ரூ.5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் வழங்கப்படும் என ராஜஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, ராஜஸ்தான் ஆளுநர் ஹரிபாவ் பகடே, முதல்-மந்திரி பஜன்லால் சர்மா, முன்னாள் முதல்-மந்திரி அசோக் கெலாட் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

2024-12-20 11:41 GMT

ஜீவனாம்சமாக கணவனின் சொத்தில் சரிசம பங்கை கேட்க முடியாது- சுப்ரீம் கோர்ட்டு அதிரடி

ஒரு பெண் தனது கணவனை விவாகரத்து செய்யும் பட்சத்தில் ஜீவனாம்சமாக தனது துணையின் சொத்தில் சரிசமமாக கோர முடியாது என சுப்ரீம் கோர்ட்டு கூறி உள்ளது. சட்டத்தின் கடுமையான விதிகள் பெண்களின் நலனுக்காகவே உள்ளன என்றும், அவர்களின் கணவர்களை தண்டிக்கவும், அச்சுறுத்தவும், ஆதிக்கம் செலுத்தவும் அல்லது மிரட்டி பணம் பறிக்கவும் பயன்படுத்தும் கருவிகள் அல்ல என்றும் சுப்ரீம் கோர்ட்டு தெளிவுபடுத்தியுள்ளது.

2024-12-20 11:36 GMT

வங்காளதேசத்தில் இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையின மக்களுக்கு எதிரான வன்முறை தொடர்பாக டிசம்பர் 8-ம் தேதி வரை 2,200 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது. 

2024-12-20 11:25 GMT

மழை முன்னறிவிப்பு

தமிழகத்தில் தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்