மழை முன்னறிவிப்புதிருச்சி, நாகப்பட்டினம்,... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 20-12-2024
மழை முன்னறிவிப்பு
திருச்சி, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், சிவகங்கை, மதுரை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இரவு 10 மணி வரை லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், தருமபுரி, சேலம், திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2024-12-20 13:56 GMT