கிருஷ்ணகிரியில் காவலர்களை தாக்கிவிட்டு தப்ப முயன்ற... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 21-02-2025
கிருஷ்ணகிரியில் காவலர்களை தாக்கிவிட்டு தப்ப முயன்ற நபர் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். காவலர்கள் துப்பாக்கியால் சுட்டதில் சுரேஷ் என்பவருக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது.தப்பி செல்ல முயன்ற மற்றொரு நபரான நாராயணனுக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதுசெய்ய சென்ற காவலர்களை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றதாக தகவல் வெளியாகி உள்ளது. பொன்மலைகுட்டை பெருமாள் கோவில் பின்புறம் 2 பேர் பதுங்கி இருந்தபோது காவல்துறையினர் சுற்றிவளைத்தனர்.
Update: 2025-02-21 07:17 GMT