போப் பிரான்சிஸ் மறைவு:சாந்தோம் தேவாலயத்தில் அஞ்சலி

சென்னை,

கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்த போப் பிரான்சிஸ் இன்று காலை தனது 88-வது வயதில் காலமானார். சுவாசப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சமீபத்தில் இல்லம் திரும்பினார். போப் பிரான்சிஸ்சின் மறைவு உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், இன்று மாலை சென்னையில் பிரசித்தி பெற்ற சாந்தோம் தேவாலயத்தில் போப் பிரான்சிஸ் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. சாந்தோம் தேவாலய பங்குத்தந்தை வின்சென்ட் சின்னதுரை தலைமையில் நடைபெற்ற இந்த அஞ்சலி நிகழ்ச்சியில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட ஏராளமான கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி கலந்துகொண்டனர்.

Update: 2025-04-21 12:37 GMT

Linked news