இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 21-04-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
மண்ணுரிமைக்காக, வாழ்வுரிமைக்காக ஆயிரம் நாட்களைக் கடந்து அறப் போராட்டம் நடத்தி வரும் என் பாசத்துக்குரிய பரந்தூர் மக்களே, நம்பிக்கையோடு இருங்கள், நாளை நமதே! - தவெக தலைவர் விஜய் எக்ஸ் பதிவு
சென்னை,
கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்த போப் பிரான்சிஸ் இன்று காலை தனது 88-வது வயதில் காலமானார். சுவாசப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சமீபத்தில் இல்லம் திரும்பினார். போப் பிரான்சிஸ்சின் மறைவு உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், இன்று மாலை சென்னையில் பிரசித்தி பெற்ற சாந்தோம் தேவாலயத்தில் போப் பிரான்சிஸ் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. சாந்தோம் தேவாலய பங்குத்தந்தை வின்சென்ட் சின்னதுரை தலைமையில் நடைபெற்ற இந்த அஞ்சலி நிகழ்ச்சியில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட ஏராளமான கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி கலந்துகொண்டனர்.
போதை மருந்துகளை கண்காணிக்க பறக்கும் படைகள்- அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு
போதை பழக்கத்தை உண்டாக்கும் மருந்துகளை பயன்படுத்துவதை தடுப்பதற்காகவும் போதை தரக்கூடிய மருந்துகளின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்காகவும் தமிழ்நாடு முழுவதும் மருந்து ஆய்வாளர்களைக் கொண்ட பறக்கும் படைகள் உருவாக்கப்படும்
10- ஆம் வகுப்பு சமூக அறிவியல் தேர்வில் ஒரு மதிப்பெண் பிரிவில் நான்காவது கேள்விக்கு பதில் அளித்து இருந்தாலே ஒரு மதிப்பெண் அளிக்கப்படும் என்று அரசு தேர்வுகள் துறை உத்தரவிட்டுள்ளது.
ஒரு மாதத்தில் 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள்" இன்னும் ஒரு மாத காலத்தில் 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளன. 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள், 10 அல்லது 15 நாட்களில் திறக்கப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜேஷ்குமாருக்கு 3 மாதம் சிறை தண்டனை விதித்தது நாகர்கோவில் நீதிமன்றம் உத்தரவு
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் வயது முதிர்வு மற்றும் உடல்நல குறைவால் காலமானார். அவருக்கு வயது 88. ஈஸ்டருக்கு நேற்று வாழ்த்து கூறிய நிலையில், வாடிகனில் உள்ள இல்லத்தில் இன்று காலை 7.35 மணியளவில் காலமானார்.
சட்டசபையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மானிய கோரிக்கை நடைபெற உள்ள நிலையில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் மெரினாவில் உள்ள முன்னாள் முதல்-அமைச்சர்கள் அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். எம்.எல்.ஏ.க்கள் காரம்பாக்கம் கணபதி, பிரபாகரன் ராஜா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
அமலாக்க துறை சோதனைக்கு எதிராக டாஸ்மாக் நிர்வாகம் தொடர்ந்த வழக்கில் 23-ந்தேதி (நாளை மறுதினம்) தீர்ப்பு வழங்கப்படும் என தகவல் தெரிவிக்கின்றது.