ஒகேனக்கல்லுக்கு இன்று காலை நிலவரப்படி வரும் நீரின்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 21-05-2025
ஒகேனக்கல்லுக்கு இன்று காலை நிலவரப்படி வரும் நீரின் அளவு 14 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு வரும் நீர் வரத்து அதிகரித்து உள்ளது.
இதனால் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்ட தொடங்கியது. மேலும் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இந்த நீர்வரத்து பற்றி காவிரி நுழைவிட பகுதியான தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளந்து கண்காணித்து வருகின்றனர்.
Update: 2025-05-21 04:02 GMT