சர்வதேச யோகா தினத்தில் ஆந்திர பிரதேசத்தின் துறைமுக... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 21-06-2025
சர்வதேச யோகா தினத்தில் ஆந்திர பிரதேசத்தின் துறைமுக நகரான விசாகப்பட்டினத்தில் உள்ள ஆர்.கே. கடற்கரையில் பிரதமர் மோடி, ஆந்திர பிரதேச முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் உள்ளிட்ட பலரும் காலை 6.30 மணி முதல் யோகாசனத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.
1,200-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள், டிரோன்கள் ஆகியவற்றை கொண்டு கண்காணிப்பு பணிகளும் நடந்து வருகின்றன. முக்கிய தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் பங்கேற்றுள்ள இந்நிகழ்ச்சிக்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். காலை 6:30 மணி முதல் நடந்து வரும் இந்த நிகழ்ச்சியில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்கின்றனர். கின்னஸ் சாதனை படைக்கும் வகையில் இந்த பிரமாண்ட யோகா நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.