இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 21-06-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;

Update:2025-06-21 09:15 IST


Live Updates
2025-06-21 14:10 GMT

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட ஞானசேகரன் யார், யாரிடம் பேசினார் என்பது தொடர்பான ஆதாரங்கள் இருப்பதாக கூறிய பாஜக அண்ணாமலையிடம் விசாரணை நடத்தக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். 

2025-06-21 13:35 GMT
  • செல்போன் பேசியபடி பேருந்து ஓட்டிய அரசுப் பேருந்து ஓட்டுநர் சஸ்பெண்ட்
  • அரசுப் பேருந்து ஓட்டுநர் செல்போன் பேசியபடி பேருந்தை இயக்கிய வீடியோ வைரல்
  • அரசுப் பேருந்து ஓட்டுநர் தற்காலிக பணியிடை நீக்கம்
  • - தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திருப்பூர் மண்டலம் உத்தரவு
2025-06-21 12:58 GMT
  • ஈரான்–இஸ்ரேல் மோதல் = ஐ.நா. அவசர கூட்டம்
  • ஈரான்–இஸ்ரேல் மோதல் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு சபையில் அவசர கூட்டம் நடைபெற்றது
  • அவசர கூட்டத்தில் ஐ.நா. பொதுச்செயலாளர், சர்வதேச அணுசக்தி ஆணைய தலைவர், பல நாட்டு தூதர்கள் பங்கேற்பு
  • ஐ.நா. கூட்டத்தில் போர் நிறுத்தம் செய்ய உடனடி சர்வதேச அரசியல் தலையீடு தேவை என வலியுறுத்தல்
  • இஸ்ரேல் நடத்திய தாக்குதல் போர் குற்றம். அமெரிக்கா போரில் ஈடுபட்டால் NPT ஒப்பந்தத்தை மீறுவதற்கு சமம் - ஈரான் தூதர்
  • ஈரானின் அணு ஆயுத அச்சுறுத்தல் முடிவடையும் வரை தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் தூதர் டேனி டானன் அணு உலைகள் மீது தாக்குதல் நடத்துவது மிக ஆபத்தானது - சர்வதேச அணுசக்தி ஆணைய தலைவர் எச்சரிக்கை
  • போர் பேரழிவுக்கு வழிவகுக்கும். உடனடி இருநாடுகளும் சமாதான தீர்வை எட்டவேண்டும் - ஐ.நா. பொதுச்செயலாளர்
2025-06-21 12:04 GMT

நடிகர் நானி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

  • தனது கதையை திருடி "ஹிட் 3" திரைப்படம் தயாரித்துள்ளதாக விமல் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு
  • நடிகர் நானி, இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் நெட்பிலிக்ஸ் நிறுவனம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • "கடந்த 2022ம் ஆண்டு "ஏஜென்ட் 11" என்ற பெயரில் இதே கதையை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்திருக்கிறேன்"
  • "ஹிட் 3" திரைப்படத்தின் மூலம் கிடைத்த வருமானத்தில் 20 சதவிதிதத்தை இழப்பீடாக வழங்க உத்தரவிட வேண்டும்"
  • "ஹிட் 3" மூலம் கிடைத்த வருமானத்தில் 20 சதவிதிதத்தை இழப்பீடாக வழங்க உத்தரவிட வேண்டும்" - மனுதாரர்
  • நடிகர் நானி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு விசாரணை ஜூலை 7ம் தேதிக்கு தள்ளிவைப்பு
2025-06-21 11:19 GMT

அதிமுக எம்.எல்.ஏ மறைவு: எடப்பாடி பழனிசாமி இரங்கல்

அதிமுக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைச் செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்டம், வால்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான திரு. தி.க. அமுல்கந்தசாமி அவர்கள் உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.

கழகத்தின் மீதும், கழகத் தலைமையின் மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டு பணியாற்றி வந்த அன்புச் சகோதரர் திரு. அமுல்கந்தசாமி அவர்கள், மாவட்ட மாணவர் அணிச் செயலாளர், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் திறம்பட கழகப் பணிகளை ஆற்றியவர். அதே போல், கோவை மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவராகவும், தற்போது வால்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் நல்ல முறையில் மக்கள் பணியாற்றிவர்.

அன்புச் சகோதரர் திரு. அமுல்கந்தசாமி அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், இந்தத் துயரத்தைத் தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியையும், தைரியத்தையும் அளிக்க வேண்டும் என்றும், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" இவ்வாறு கூறியுள்ளார். 

2025-06-21 10:33 GMT

வால்பாறை அதிமுக எம்.எல்.ஏ அமுல் கந்தசாமி(வயது 60) உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த அமுல் கந்தசாமி சிகிச்சை பலனின்றி காலமானார்.

2025-06-21 09:34 GMT

நேரில் ஆஜராவதில் இருந்து பொன்முடிக்கு விலக்கு

  • சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விலக்கு
  • செம்மண் முறைகேடு தொடர்பான வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு
  • வழக்கின் விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க கோரி பொன்முடி தாக்கல் செய்த மனுவில் நீதிமன்றம் உத்தரவு
  • குற்றச்சாட்டு பதிவு உள்ளிட்ட நடைமுறைகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டால் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
Tags:    

மேலும் செய்திகள்