ஆபரேஷன் சிந்து பற்றி மத்திய வெளிவிவகார அமைச்சக... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 21-06-2025

ஆபரேஷன் சிந்து பற்றி மத்திய வெளிவிவகார அமைச்சக செயலாளர் அருண் குமார் சாட்டர்ஜி கூறும்போது, 290 இந்தியர்களை சுமந்து கொண்டு ஈரானில் இருந்து வந்த 3-வது சிறப்பு விமானம் பாதுகாப்பாக தரையிறங்கி உள்ளது. இதில், 190 பேர் காஷ்மீரை சேர்ந்தவர்கள். டெல்லி, அரியானா, கர்நாடகா, மேற்கு வங்காளம் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்தவர்களும் உள்ளனர்.

நமக்காக ஈரான் அரசு தன்னுடைய வான்வெளியை திறந்து, இந்தியர்கள் செல்ல அனுமதி அளித்தது மகிழ்ச்சி அளிக்கும் விசயம். இரு நாடுகளுக்கு இடையேயான உறவை இது காட்டுகிறது. ஆபரேஷன் சிந்து விமானங்கள் இஸ்ரேலில் இருந்தும் விரைவில் சொந்த நாட்டுக்கு வந்து சேரும் என்று அவர் கூறியுள்ளார்.

Update: 2025-06-21 05:03 GMT

Linked news