கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள பச்சைமலை எஸ்டேட்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 21-06-2025

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள பச்சைமலை எஸ்டேட் வடக்கு பிரிவில் தேயிலை தோட்டத்தில் தொழிலாளர்களாக வேலை பார்த்து வரும் மனோஜ் முந்தா-மோனிகா தேவி தம்பதியின் மூத்த மகள் ரோஷினி குமாரியை நேற்று மாலை சிறுத்தை ஒன்று கவ்வி சென்றது. இரவு சுமார் 9.30 மணி வரை தேடியும் சிறுமியின் உடலை கண்டுபிடிக்க முடியவில்லை. தாயின் கண் முன்னே இந்த கொடூரம் நடந்துள்ளது. இந்நிலையில், அந்த சிறுமியின் உடல் இன்று மீட்கப்பட்டு உள்ளது. சிறுமியை கவ்வி சென்ற சிறுத்தை மீண்டும் அந்த பகுதிக்கு வருவதற்கான சாத்தியம் அதிகரித்து உள்ளது. இதனால், அந்த பகுதியில் வசித்து வருபவர்கள் அச்சமடைந்து உள்ளனர்.

Update: 2025-06-21 07:14 GMT

Linked news