திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனாதிபதி திரவுபதி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 21-11-2025
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சாமி தரிசனம்
திருமலை,
ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்றார். அங்கு அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன் பின்னர் ஜனாதிபதி, ஏழுமலையானை தரிசனம் செய்தார். பின்னர், ரங்கநாதர் மண்டபத்தில் வேத பண்டிதர்கள் வேத ஆசிர்வாதம் செய்து, தீர்த்த பிரசாதம் வழங்கினர். ஜனாதிபதியின் வருகையையொட்டி, திருமலையில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
Update: 2025-11-21 11:32 GMT