இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 21-11-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
Image Courtacy: ICCTwitter
27 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 28 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, கோயம்புத்தூர், செங்கல்பட்டு, சென்னை, தருமபுரி, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ராணிப்பேட்டை, சேலம், திருவள்ளூர், திருவாரூர், திருச்சி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, மதுரை, ராமநாதபுரம், தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காசி தமிழ் சங்கமம்: தமிழகத்தில் இருந்து சிறப்பு ரெயில்கள் இயக்கம்
காசி தமிழ் சங்கமம் 4.0-ஐ முன்னிட்டு, கூட்ட நெரிசலை தவிர்க்க தமிழகத்தில் இருந்து பனாரசுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சாமி தரிசனம்
திருமலை,
ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்றார். அங்கு அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன் பின்னர் ஜனாதிபதி, ஏழுமலையானை தரிசனம் செய்தார். பின்னர், ரங்கநாதர் மண்டபத்தில் வேத பண்டிதர்கள் வேத ஆசிர்வாதம் செய்து, தீர்த்த பிரசாதம் வழங்கினர். ஜனாதிபதியின் வருகையையொட்டி, திருமலையில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
மிஸ் யுனிவர்ஸ் அழகி பட்டத்தை வென்றார் மெக்சிக்கோவின் பாத்திமா போஷ்.!
2025ஆம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை மெக்சிகோ நாட்டை சேர்ந்த பாத்திமா போஷ் வென்றார். கடந்த ஆண்டு வெற்றியாளரான டென்மார்க்கைச் சேர்ந்த விக்டோரியா கஜேர் தீல்விக்கிடமிருந்து பாத்திமா போஷ் கிரீடத்தைப் பெற்றார். தாய்லாந்தின் வீணா பிரவீனர் சிங் முதல் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தார். இவர் முதல் ரன்னர் அப் ஆக தேர்வு செய்யப்பட்டார். மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்ற, பாத்திமா போஷ்க்கு வாழ்த்துகளை பலரும் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர். இந்த போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்துகொண்ட மனிகா விஸ்வகர்மாவால், முதல் 12 இடங்களுக்குள் வர முடியவில்லை.
துபாயில் விமான கண்காட்சியின்போது இந்தியாவின் தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து
துபாய் விமான கண்காட்சியில் இன்று இந்தியாவின் தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. மதியம் 2.10 மணியளவில் சாகச செயலில் ஈடுபட்டிருந்தபோது தேஜஸ் போர் விமானம் விமானியின் கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானம் வெடித்து சிதறியது. விமானத்தை இயக்கிய விமானியின் நிலை குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
28 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 28 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, அரியலூர், கடலூர், திண்டுக்கல், கரூர், மதுரை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, செங்கல்பட்டு, சென்னை, தருமபுரி, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, சேலம், திருவள்ளூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டம்: மாநில அரசிடம்தான் குளறுபடி உள்ளது - எடப்பாடி பழனிசாமி
மெட்ரோ ரெயில் திட்ட அறிக்கையை திமுக அரசு கவனக்குறைவாக அனுப்பியுள்ளது. திட்ட அறிக்கையை சமர்ப்பித்தபோது 2011 மக்கள் தொகையை திமுக அரசு குறிப்பிட்டது ஏன்? 2025-ம் ஆண்டு மக்கள் தொகையை கணக்கிட்டு அனுப்பியிருந்தால் ஒப்புதல் கிடைத்திருக்குமே? கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்கள் தொடர்பாக விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை. கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டத்தில் மாநில அரசிடம் தான் குளறுபடி உள்ளது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சர்ச்சை பதிவு.. ஆதவ் அர்ஜுனா மீதான வழக்கு ரத்து
ஆதவ் அர்ஜுனா, தனது எக்ஸ் தளத்தில் தமிழக அரசை எச்சரிக்கும் வகையில் பதிவிட்டிருந்தார். இது தொடர்பான வழக்கை சென்னை ஐகோர்ட்டு இன்று ரத்து செய்தது. உள்நோக்கத்துடன் கருத்து பதிவிடவில்லை, உடனே அது நீக்கப்பட்டுவிட்டது என்று ஆதவ் அர்ஜூனா தரப்பில் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
யூரியா உள்ளிட்ட உரங்கள் பதுக்கப்படுவதைத் தடுத்து தமிழ்நாட்டில் நிலவும் யூரியா தட்டுப்பாட்டினை போக்க முதல்-அமைச்சர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.