செங்கல்பட்டு: பெண்களுக்கு என்று தனியாக நவீன பூங்கா... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 22-04-2025

செங்கல்பட்டு: பெண்களுக்கு என்று தனியாக நவீன பூங்கா அமைக்கப்படுமா.? அமைச்சர் பதில்

தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பேசிய செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி, செங்கல்பட்டு தொகுதியில் பெண்களுக்கு என்று தனியாக நவீன பூங்கா அமைக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு, நகர்புறங்களில் மாலை நேரத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயன்பத்த பூங்கா அமைத்து வருகிறோம். பூங்கா அமைக்க தேவையான நிதியை முதல்வர் ஒதுக்கீடு செய்து உள்ளார். எனவே இடம் இருந்தால் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதில் அளித்தார்.

Update: 2025-04-22 04:41 GMT

Linked news