இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 22-04-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;

Update:2025-04-22 08:04 IST


Live Updates
2025-04-22 12:41 GMT
தமிழகத்திற்கு அடுத்த மாதம் காவிரியில் இருந்து 2.5 டி.எம்.சி தண்ணீரை விடுவிக்க வேண்டும் என்று கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
2025-04-22 12:40 GMT

ஜம்மு காஷ்மீர் தாக்குதல் சம்பவம் குறித்து சவுதி அரேபியாவில் இருந்து பிரதமர் மோடி கேட்டறிந்துள்ளார். உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, நேரில் சென்று நிலவரத்தை கண்காணிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

2025-04-22 12:23 GMT

கொள்கை பரப்புரை - விரைவில் தவெக தலைவர் விஜய் வாகன பிரச்சாரம் மேற்கொள்ள திட்டம்

விஜய் வாகன பிரச்சாரத்திற்கு முன்னதாக,

கொள்கை குறித்து நிர்வாகிகள் வாகன பிரச்சாரம் மேற்கொள்ள தலைமை உத்தரவு

கட்சி தொடங்கி ஓராண்டு நிறைவடைந்த நிலையில், வாகன பிரச்சாரம் மூலம் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்ல தமிழக வெற்றிக் கழகம் முடிவு

2025-04-22 11:59 GMT
  • பழங்களுடன் கஞ்சா கடத்தல் - இருவர் கைது
  • ஆந்திராவில் இருந்து திராட்சை மற்றும் அன்னாசி பழங்களுடன் கஞ்சா கடத்தல்
  • 300 கிலோ கஞ்சா, வேன் பறிமுதல்,
  • மகாராஷ்டிராவை சேர்ந்த இருவர் கைது
  • பழ வியாபாரத்திற்கு செல்லும் போது கஞ்சா மூட்டைகளை மொத்தமாக கடத்தி வந்து கஞ்சா வியாபாரிகளுக்கு விற்று வந்தது கண்டுபிடிப்பு
2025-04-22 11:12 GMT

நில அபகரிப்பு தொடர்பாக ஜெயக்குமாருக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

2025-04-22 09:53 GMT

தமிழக சட்ட சபையில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார்.

2025-04-22 09:33 GMT

ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட இந்திய குடிமை பணிகளுக்காக நடத்தப்பட்ட இறுதித்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 1,009- பேர் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

2025-04-22 09:23 GMT

நாடாளுமன்றமே உச்ச அதிகாரம் கொண்டது: ஜெகதீப் தன்கர்

டெல்லி பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பேசியதாவது:-

நாடாளுமன்றமே உச்ச அதிகாரம் கொண்டது, அதைவிட உயர்ந்த அதிகாரம் கொண்டது எதுவும் இல்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளான எம்,பி, எம்.எல்.ஏ.க்களே எல்லோருக்கும் எஜமானர்கள். அரசியலமைப்பு சட்டம் மக்களுக்கானது. அதில் எந்த சந்தேகமும் வேண்டாம் என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்