பூங்காவுக்காக ஒதுக்கப்படும் இடங்களில்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 22-04-2025

பூங்காவுக்காக ஒதுக்கப்படும் இடங்களில் ஆக்கிரமிப்பு: அமைச்சர் கே.என். நேரு அளித்த உறுதி என்ன..?

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பேசிய பாமக உறுப்பினர் அருள், சேலம் மாநகராட்சியில் புதிய லே அவுட் போடப்படும் போது பூங்காவுக்காக ஒதுக்கப்படும் இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதாகவும், மாநகராட்சி பூங்கா அமைத்து பராமரிக்கும் பணியை அரசே ஏற்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இதற்கு பதிலளித்து பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு, OSR நிலத்தில் பூங்காவுக்காக ஒதுக்கப்படும் இடத்தை எவராலும் ஆக்கிரமிக்க முடியாது என்றும், ஒருவேளை உறுப்பினர் சொல்வது போல் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தால் அது எப்பேற்பட்டவர்களாக இருந்தாலும் அவர்களிடம் இருந்து அந்த நிலம் மீட்கப்படுவதோடு, சேலம் மாநகராட்சிக்கு போதுமான பூங்காக்கள் அமைத்து தரப்படும் என்று உறுதியளித்தார்.

Update: 2025-04-22 05:09 GMT

Linked news