பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படுமா..? -... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 22-04-2025

பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படுமா..? - அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்


சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், தமிழக அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பழைய ஓய்வூதியதிட்டம் அமல்படுத்தப்படுமா என சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசிய நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, அரசு ஊழியர்கள் நலனின் மிகுந்த அக்கறையோடு அரசு செயல்பட்டு வருவதாகவும், தொடர்ந்து அவர்களின் கோரிக்கை இருந்து வருகிறது என்றும், பழைய ஓய்வூதியத்தை பொறுத்தவரையிலும் குழு அமைக்கப்பட்டதாகவும் கூறினார்.

மேலும், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பல்வேறு கருத்துக்களை அந்த குழுவிடம் தெரிவித்துள்ளதாக கூறிய அவர், அப்படியே ஓய்வூதிய திட்டம் குறித்து முதல்-அமைச்சர் கவனித்து வருவதாகவும் உரிய நேரத்தில் சரியான முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்

Update: 2025-04-22 05:15 GMT

Linked news