தொகுப்பூதிய செவிலியர்களுக்கு, நிரந்தர... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 22-04-2025
தொகுப்பூதிய செவிலியர்களுக்கு, நிரந்தர செவிலியர்களுக்கு இணையாக ஊதியம் - ஐகோர்ட்டு உத்தரவு
தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் தொகுப்பூதிய செவிலியர்களுக்கு, நிரந்தர செவிலியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
2018ஆம் ஆண்டு ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை மூன்று மாதங்களில் அமல்படுத்த வேண்டும் என்று கூறி, செவிலியர்கள் தொடர்ந்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கு முடித்துவைக்கப்பட்டது.
மேலும் இந்த உத்தரவை அமல்படுத்தாவிட்டால், கோர்ட்டு அவமதிப்பு வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Update: 2025-04-22 06:11 GMT