ராயபுரம் அருகே மின்சார ரெயில் சேவை பாதிப்புசென்னை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 22-04-2025

ராயபுரம் அருகே மின்சார ரெயில் சேவை பாதிப்பு

சென்னை ராயபுரம் அருகே ஆவடியில் இருந்து கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரெயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது.

ஆவடியில் இருந்து வந்த மின்சார ரெயிலின் 3-வது பெட்டியின் இரண்டு சக்கரங்கள் விலகியதால் தடம்புரண்டதாக கூறப்படுகிறது.

இந்த விபத்து சம்பவத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அங்கு சீரமைப்பு பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் மின்சார ரெயில் சேவை தற்போது பாதிக்கப்பட்டுள்ளது. 

Update: 2025-04-22 06:58 GMT

Linked news