பிரதமர் மோடி கர்ணி மாதா கோவிலுக்கு இன்று காலை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 22-05-2025
பிரதமர் மோடி கர்ணி மாதா கோவிலுக்கு இன்று காலை 10.30 மணியளவில் வருகை தந்துள்ளார். அவருடன் ராஜஸ்தான் முதல்-மந்திரி பஜன் லால் சர்மாவும் சென்றார். கோவிலில் சிறப்பு ஆராதனைகள் மேற்கொள்ளப்பட்டன. பிரதமர் மோடியின் வருகையால் நகர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.
பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு, அவரை கவுரவிக்கும் வகையில் கோவிலில் சிறப்பு சடங்குகள் மற்றும் வழிபாடுகள் நடத்தப்பட்டன.
இதனை தொடர்ந்து, சாலை வழியாக 8 கி.மீ. தொலைவு பயணம் செய்து பலானா கிராமத்திற்கு சென்றடைகிறார். அவர் பொது கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார். இதனை காண 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இருக்கை வசதிகள் மற்றும் பெரிய பந்தல் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
Update: 2025-05-22 06:07 GMT