இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 22-05-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
த.வெ.க.வில் இருந்து வெளியேறி தி.மு.க.வில் இணைந்த வைஷ்ணவி
தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து வெளியேறிய வைஷ்ணவி, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தார். அவருடன் மேலும் சில இளைஞர்களும் திமுகவில் இணைந்தனர்.
ஐ.பி.எல்.2025: லக்னோவுக்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சு தேர்வு
டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி லக்னோ முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
காரைக்கால் - பேரளம் புதிய அகல ரெயில் பாதையில் நாளை மறுநாள் அதிவேக ரெயில் சோதனை ஓட்டம்
காரைக்கால் - பேரளம் இடையே புதிதாக அமைக்கப்பட்டுள்ள மின்மய அகல ரெயில் பாதையில் அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் 24-5-2025 அன்று (நாளை மறுநாள்) நடைபெற இருக்கிறது.
வக்பு சட்டத்திற்கு எதிரான வழக்கு: தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
வக்பு சட்டத்திற்கு எதிரான வழக்கில் வாதங்கள் முடிந்த நிலையில் தீர்ப்பு, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வக்பு சட்டம் தொடர்பாக சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது கடந்த 3 நாட்கள் வாதம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
ராணிப்பேட்டை: சரக்கு ரெயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து
சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு சென்ற சரக்கு ரெயிலின் 2 பெட்டிகள், அரக்கோணத்தில் தடம் புரண்டது.
இந்நிலையில் சென்னையில் இருந்து அரக்கோணம் வழியாக திருவனந்தபுரம் செல்லும் எக்ஸ்பிரஸ், பெங்களூர் செல்லும் லால்பாக் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரெயில்கள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.
தற்போது சரக்கு ரெயிலின் பெட்டிகளை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
"தமிழ்நாட்டுக்கான நிதியை மத்திய அரசு ஒதுக்காதது ஏன்?" - சென்னை ஐகோர்ட்டு கேள்வி
RTE சட்டத்தின் கீழ் 25 சதவீதம் இட ஒதுக்கீட்டு இடங்களுக்கு தமிழ்நாட்டுக்கான நிதியை மத்திய அரசு ஒதுக்காதது ஏன்? என சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.
இதனைத்தொடர்ந்து நிதி குறித்த விவரங்களை சமர்ப்பிக்க மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு கெடு விதித்தது.
முன்னதாக RTE சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை இதுவரை தொடங்கப்படவில்லை எனக் கூறி தொடரப்பட்ட வழக்கில் கோர்ட்டு இந்த கேள்வி எழுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இனி சாவதே மேல் என முடிவெடுத்த அவர் அடுத்த நொடியிலேயே காதலியின் வீட்டு முன் உயிரை மாய்த்துக் கொண்டார். அதாவது அங்குள்ள ஒரு மரத்தில் தூக்கில் தொங்கினார்.
'டாஸ்மாக் வழக்கில் அரசியலமைப்பு சட்டத்தை அமலாக்கத்துறை மீறியுள்ளது' - என்.ஆர்.இளங்கோ
டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை அரசியலமைப்பை மீறியுள்ளது என வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தெரிவித்துள்ளார்.
திருமணமான பெண்ணுடன் தகாத உறவில் இருந்த 17 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்
நள்ளிரவு நேரத்தில் முகேஷ் தாக்கூர் தனது வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு தனது மனைவியுடன் அந்த சிறுவன் தகாத உறவில் இருந்ததை கண்டு முகேஷ் அதிர்ச்சியடைந்தார்.
சல்மான் கான் வீட்டில் நுழைய முயன்ற பெண் கைது
நடிகர் சல்மான் கான் வீட்டிற்குள் அத்துமீறி நுழைய முயன்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட இஷா சாம்ரா என்ற பெண்ணிடம் மும்பை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட பெண் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.