"தமிழ்நாட்டுக்கான நிதியை மத்திய அரசு ஒதுக்காதது... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 22-05-2025
"தமிழ்நாட்டுக்கான நிதியை மத்திய அரசு ஒதுக்காதது ஏன்?" - சென்னை ஐகோர்ட்டு கேள்வி
RTE சட்டத்தின் கீழ் 25 சதவீதம் இட ஒதுக்கீட்டு இடங்களுக்கு தமிழ்நாட்டுக்கான நிதியை மத்திய அரசு ஒதுக்காதது ஏன்? என சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.
இதனைத்தொடர்ந்து நிதி குறித்த விவரங்களை சமர்ப்பிக்க மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு கெடு விதித்தது.
முன்னதாக RTE சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை இதுவரை தொடங்கப்படவில்லை எனக் கூறி தொடரப்பட்ட வழக்கில் கோர்ட்டு இந்த கேள்வி எழுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Update: 2025-05-22 12:40 GMT