உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழா கோலாகலமாக... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 22-09-2025
உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழா கோலாகலமாக தொடங்கியது
கர்நாடகத்தின் ‘நாடஹப்பா’ என்றழைக்கப்படும் மைசூரு தசரா விழா மன்னர் காலத்தில் இருந்தே கொண்டாடப்பட்டு வருகிறது. வரலாற்று சிறப்புமிக்க 415-ம் ஆண்டு தசரா விழா இன்று (திங்கட்கிழமை) முதல் அடுத்த மாதம் (அக்டோபர்) 2-ந் தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் தசரா விழா, மைசூரு சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் மீது பூக்களை தூவி முக்கிய பிரபலங்கள் தொடங்கி வைப்பார்கள்.
தசரா விழாவையொட்டி இன்று (திங்கட்கிழமை) குப்பண்ணா பூங்காவில் மலர் கண்காட்சி, மகாராஜா கல்லூரி மைதானத்தில் உணவு மேளா, மானஷ கங்கோத்ரி வளாகத்தில் மல்யுத்த போட்டிகள் தொடங்குகின்றன.
Update: 2025-09-22 07:41 GMT