மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இலங்கை முன்னாள்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 22-11-2025
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே சாமி தரிசனம்
இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே இன்று காலை விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தார். தொடர்ந்து அங்கிருந்து சாலை மார்க்கமாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தார். அவருடன் அவரது மனைவி வந்திருந்தார். அவர்கள் இருவரையும் வரவேற்ற கோவில் நிர்வாகத்தினர். அவர்களை அம்மன் சன்னதி வழியாக கோவிலுக்குள் அழைத்துச் சென்றனர். தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள சன்னதிகளில் விக்ரமசிங்கே தனது மனைவியுடன் சாமி தரிசனம் மேற்கொண்டார்.
Update: 2025-11-22 09:09 GMT