அமலாக்கத்துறையின் சோதனையை எதிர்த்து டாஸ்மாக்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 23-04-2025
அமலாக்கத்துறையின் சோதனையை எதிர்த்து டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு
டாஸ்மாக் விவகாரம் தொடர்பான வழக்கு இறுதிக்கட்ட விசாரணைக்காக நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. டாஸ்மாக் தரப்பில் மூத்த வக்கீல் விகாஸ்சிங் வாதம் செய்தார். அவர், 'அமலாக்கத்துறைக்கு சோதனை நடத்த அதிகார வரம்பு இல்லை. மிகப்பெரிய ஊழல் நடைபெற்றதாக அமலாக்கத்துறை எவ்வாறு சொல்ல முடியும்?' என்று வாதிட்டார். அமலாக்கத்துறை தரப்பில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததையடுத்து இன்று (புதன்கிழமை) தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதிகள் அறிவித்தனர்.
Update: 2025-04-23 02:50 GMT