விராட் கோலிக்கு ஏன் தண்டனை வழங்கவில்லை - ஆகாஷ்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 23-04-2025
விராட் கோலிக்கு ஏன் தண்டனை வழங்கவில்லை - ஆகாஷ் சோப்ரா கேள்வி
கடந்த சில தினங்களுக்கு முன் பஞ்சாப்புக்கு எதிரானப் போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியின் வெற்றியை கொண்டாடிய பெங்களூரு வீரர் விராட் கோலி, பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரை பார்த்து வேண்டுமென்றே வெறுப்பேற்றும் வகையில் கொண்டாடியது சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில் இதற்கெல்லாம் தண்டனை கிடையாதா? என்று முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா கேள்வி எழுப்பி உள்ளார். குறிப்பாக திக்வேஷ் முதல் பயிற்சியாளர்கள் வரை அனைவருக்கும் அபராதம் போட்ட பி.சி.சி.ஐ-க்கு விராட் கோலி மட்டும் விதிவிலக்கா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
Update: 2025-04-23 02:59 GMT