சென்னை விமான நிலையம் - கிளாம்பாக்கம் வரை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 23-04-2025

சென்னை விமான நிலையம் - கிளாம்பாக்கம் வரை மெட்ரோ  - தமிழ்நாடு அரசு ஒப்புதல்

சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரையான 15.46 கி.மீ தொலைவு மெட்ரோ ரெயில் வழித்தட விரிவாக்கத்திற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்படி நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்கு சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்தது. மத்திய அரசின் ஒப்புதலுக்காக இவை அனுப்பி வைக்கப்பட்டு, அனுமதிக்கு பிறகு இந்த வழித்தடத்திற்கான கட்டுமான பணிகள் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

Update: 2025-04-23 05:42 GMT

Linked news