பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தோர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 23-04-2025

பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்: காஷ்மீர் முதல்-மந்திரி

பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை ஜம்மு காஷ்மீர் முதல்-மந்திரி உமர் அப்துல்லா கடுமையாகக் கண்டித்துள்ளார். இது ஒரு அருவருப்பான, மிக மோசமான மனிதாபிமானமற்ற செயல் என்றும், சமீபத்திய ஆண்டுகளில் பொதுமக்களை நோக்கி நடத்தப்பட்ட எந்தத் தாக்குதலையும் விட மிகப் பெரியது என்றும் அவர் கூறி இருந்தார்.

இந்நிலையில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படுகாயம் அடைந்தோருக்கு ரூ.2 லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரு.1 லட்சமும் நிவாரணமாக வழங்கப்படும் என்று காஷ்மீர் முதல்-மந்திரி உமர் அப்துல்லா அறிவித்துள்ளார்.

Update: 2025-04-23 06:16 GMT

Linked news