பஹல்காம் தாக்குதல்: ஐ.பி.எல் போட்டியில் மவுன... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 23-04-2025
பஹல்காம் தாக்குதல்: ஐ.பி.எல் போட்டியில் மவுன அஞ்சலி - பட்டாசுகள் வெடிக்க தடை
ஐ.பி.எல். தொடரில் ஐதராபாத்தில் இன்று நடைபெற உள்ள மும்பை - ஐதராபாத் இடையிலான லீக் ஆட்டத்தின் போது பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பலியானதற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வீரர்கள், நடுவர்கள் என அனைவரும் கைகளில் கருப்பு பட்டை அணிந்து பங்கேற்க வேண்டும் என பி.சி.சி.ஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த போட்டியின் போது, சியர்லீடர்கள் நடனமாடக்கூடாது எனவும், பட்டாசுகள் வெடிக்கக்கூடாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆட்டம் தொடங்குவதற்கு முன்னர் ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
Update: 2025-04-23 08:22 GMT