அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு விருந்து அளிக்கும்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 23-04-2025
அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு விருந்து அளிக்கும் எடப்பாடி பழனிசாமி
அதிமுக - பாஜக கூட்டணி அமைந்ததை அடுத்து, இன்று அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு அசைவ விருந்து வழங்குகிறார் எடப்பாடி பழனிசாமி. சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள அவரது இல்லத்தில் இந்த விருந்து உபசரிப்பு நடக்கிறது. பாஜக கூட்டணியை விரும்பாத சில எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்த இவ்விருந்து எனத் தகவல் வெளியாகியுள்ளது. 2 மாதங்களாக எடப்பாடி பழனிசாமியை சந்திக்காத செங்கோட்டையன் இன்றைய விருந்தில் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது.
Update: 2025-04-23 13:17 GMT