பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மவுன... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 23-04-2025
பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்திய மும்பை, ஐதராபாத் அணி வீரர்கள்
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று இரவு (புதன்கிழமை) ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் 41-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து ஐதரபாத் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
முன்னதாக ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பலியானதற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வீரர்கள், நடுவர்கள் என அனைவரும் கைகளில் கருப்பு பட்டை அணிந்து ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். இந்த போட்டியின்போது, சியர்லீடர்கள் நடனமாடக்கூடாது எனவும், பட்டாசுகள் வெடிக்கக்கூடாது எனவும் பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.
Update: 2025-04-23 14:58 GMT