மின்சாரம் தாக்கி உயிரிழந்த தூய்மைப் பணியாளர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 23-08-2025
மின்சாரம் தாக்கி உயிரிழந்த தூய்மைப் பணியாளர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம்
சென்னையில் மின்சாரம் பாய்ந்து தூய்மைப் பணியாளர் உயிரிழந்த விபரீத சம்பவம் நிகழ்ந்துள்ளது. காலையில் வேலைக்கு சென்ற நிலையில், கண்ணகி நகரில் சாலையில் தேங்கியிருந்த மழைநீரில் கால் வைத்த போது மின்சாரம் பாய்ந்து தூய்மைப் பணியாளர் வரலட்சுமி (30) உயிரிழந்தார்.
இந்த நிலையில், மின்சாரம் தாக்கி உயிரிழந்த தூய்மைப் பணியாளர் வரலட்சுமியின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மின்சார வாரியம் சார்பில் ரூ.10 லட்சமும், தனியார் நிறுவனம் சார்பில் ரூ.10 லட்சமும் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-08-23 05:16 GMT