குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 23-09-2025
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: கொடியேற்றத்துடன் தொடங்கியது
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் தசரா திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். பல லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுவார்கள். கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது.
Update: 2025-09-23 04:19 GMT