இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 23-09-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
தாகாசாகேப் பால்கே விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பெற்றுக்கொண்டார் மோகன் லால்.
நடிகர்கள் மம்மூட்டி, துல்கர் சல்மான் வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், துல்கரின் 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பூட்டான் நாட்டின் வழியாக கார் இறக்குமதி செய்தததாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மழை நீர் வடிகால் அமைக்க சாலைகளில் பள்ளம் தோண்டும் போது உரிய பாதுகாப்பு சட்ட விதிகள் பின்பற்றபடவில்லை என்றால் காவல்துறையிடம் புகார் அளிக்கலாம் என்று சென்னைஐகோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது. மழை நீர் வடிகால் பணிகள் நடைபெறும் இடங்களில் எந்தவித பாதுகாப்பு விதிகளும் பின்பற்றாமல் உள்ள ஒப்பந்ததாரர்கள், அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக் கோரி ஸ்டாலின் ராஜா என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
சென்னை மெட்ரோ ரெயிலில் பயணித்த மலேசிய நாட்டவரின் கைப்பையை திருடிச் சென்ற தனியார் நிறுவனத்தின் எச்.ஆர். சுனில்ராஜ் என்பவர் கைது செய்யப்பட்டார். 8 சவரன் தங்க நகைகள் மற்றும் பாஸ்போர்ட் உள்ளிட்ட மலேசிய ஆவணங்கள் அந்த பையில் இருந்தன்.
ஐநாவில் நிலவும் நிதிப் பற்றாக்குறையால் தனது 2026 பட்ஜெட்டில் இருந்து $500 மில்லியனை குறைக்கவும், 20 சதவீதம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யவும் முடிவு செய்துள்ளது. ஐநாவுக்கு அமெரிக்க அரசு வழங்கி வந்த மொத்த நிதியில் சுமார் $1 பில்லியனை குறைத்ததால் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
டெல்லியில் 71ஆவது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா தொடங்கி உள்ளது. 2023-ம் ஆண்டுக்கான தேசிய விருதுகளை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கி வருகிறார்.
திருவள்ளூர், கும்மிடிப்பூண்டியில் புதிதாக உருவான குமரஞ்சேரி முருகன் கோவிலுக்கு நடிகர் தாடி பாலாஜி வருகை தந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "விஜய்யின் சுற்றுப்பயணம் வெற்றியடைய பிரார்த்தித்தேன். மக்கள் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். இது 2026 தேர்தலில் வாக்குகளாக மாறும்" என்று தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மோசமாக உள்ளதாகவும் அவர் விமர்சித்தார்.
சென்னையில் ஒரு சில இடங்களில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு
சென்னையை பொறுத்தவரை இன்றும், நாளையும் பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.