டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் பிரதமர் மோடி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-05-2025
டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் பிரதமர் மோடி தலைமையில் 10-வது நிதி ஆயோக் கவுன்சில் கூட்டம் தொடங்கியுள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் புறப்பட்டு சென்றுள்ளார். இந்த கூட்டத்தில் பா.ஜ.க. ஆளும் முதல்-மந்திரிகள் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த முதல்-மந்திரிகளும் பங்கேற்றுள்ளனர்.
இந்த கூட்டத்தில், தமிழகத்திற்கு தேவையான நிதியை விடுவிக்க பிரதமர் நரேந்திரமோடியிடம், மு.க. ஸ்டாலின் நேரடியாக வலியுறுத்த இருக்கிறார். இதேபோல், பிற மாநில முதல்-மந்திரிகளும் தங்கள் மாநிலத்திற்கு தேவையான நிதியை கேட்க இருக்கின்றனர்.
Update: 2025-05-24 05:54 GMT