இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-05-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
திடீரென முடங்கிய எக்ஸ் வலைதளம்; பயனாளர்கள் அவதி
இந்தியாவில் இன்று எக்ஸ் வலைதளம் திடீரென முடங்கியுள்ளது. மாலை 6 மணிமுதல் எக்ஸ் வலைதளத்தில் டுவிட் செய்ய முடியாமலும், டுவிட் செய்யப்பட்ட பதிவுகளை ரிபிரஷ் செய்ய முடியாமலும் பயனாளர்கள் அவதியடைந்துள்ளனர்.
ஐ.பி.எல். 2025: டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சு தேர்வு
இன்றைய போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி பஞ்சாப் அணி பேட்டிங் செய்ய உள்ளது.
கல்விநிதி கிடைக்குமென நம்பிக்கையோடு இருப்போம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி
நிதி ஆயோக் கூட்டம் நிறைவடைந்ததும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
ரெட் அலர்ட் எதிரொலி.. நீலகிரியில் தொட்டபெட்டாவுக்கு செல்லத் தடை
நீலகிரிக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து தொட்டபெட்டா, பைன் பாரஸ்ட் பகுதிகளுக்கு நாளை (மே 25ம் தேதி) செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நாளை ஒருநாள் தொட்டபெட்டா மூடப்படுகிறது.
பிரதமர் மோடியுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
டெல்லியில் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியுடன் சந்தித்து பேசினார்.
முன்னதாக நிதி ஆயோக் கூட்டத்தில், பிரதமர் மோடி, ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு மற்றும் அனைத்து மாநில முதல்-மந்திரிகளுடனும் உரையாடினார்
டாஸ்மாக் ஊழல்கள் அம்பலப்படுத்தப்படும் - தயாநிதி மாறனுக்கு ஆர்.பி.உதயகுமார் பதிலடி
தி.மு.க.வின் விளையாட்டு மேம்பாட்டு அணிச் செயலாளர் தயாநிதி மாறன், தமிழக விளையாட்டுத் துறை மந்திரியைப் போலவே விளையாட்டுத்தனமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
கார் மீது லாரி மோதி கோர விபத்து - 5 பேர் பலி
ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் ராயசோட்டி பகுதியில் இருந்து கடப்பா மாவட்டத்திற்கு இன்று கார் சென்றுகொண்டிருந்தது. அந்த காரில் 3 பெண்கள், குழந்தை உள்பட 5 பேர் பயணித்தனர்.
இந்நிலையில், கடப்பாவின் கவுலச்சேருவு பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் சென்றபோது பின்னால் வந்த லாரி அதிவேகமாக கார் மீது மோதியது.
இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார். பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காரில் பயணித்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
தமிழ்நாட்டிலும் தொடங்கியது தென்மேற்கு பருவமழை - கனமழைக்கு வாய்ப்பு
கேரளாவைத் தொடர்ந்து தமிழகத்திலும் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதாகவும், வரும் 28ஆம் தேதி வரை தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மைய தென்மண்டல தலைவர் அமுதா தெரிவித்துள்ளார்.
மத்திய வரியில் 50 சதவீதம் தமிழ்நாட்டிற்கு தர வேண்டும் - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
நிதிஆயோக் கூட்டத்தில், மத்திய வரிகளில் மாநிலங்களுக்கு 50 சதவீத உரிமைப் பங்கை வழங்க வேண்டும் என்று தான் கோரினேன் என்றும், வாக்குறுதியளிக்கப்பட்ட 41 சதவீதத்திற்கு எதிராக தற்போது நாம் 33.16 சதவீதத்தை மட்டுமே பெறுகிறோம் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.