நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-05-2025
நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றுள்ளார். இதுபற்றி துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறும்போது, மாநிலத்திற்கான நிதியை கேட்பதற்காக தமிழக முதல்-அமைச்சர் நிதி ஆயோக் கூட்டத்திற்கு சென்றிருக்கிறார்.
நாங்கள் ஈ.டி.க்கும் (அமலாக்கத்துறை) பயப்பட மாட்டோம், மோடிக்கும் பயப்பட மாட்டோம். தொடர்ந்து குரல் கொடுத்து கொண்டே இருப்போம். தவறு செய்தவர்கள்தான் பயப்பட வேண்டும். யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது. மிரட்டி அடிபணிய வைக்கும் அளவிற்கு தி.மு.க. அடிமை கட்சி கிடையாது என்று தெரிவித்துள்ளார்.
Update: 2025-05-24 07:32 GMT