மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த சில நாட்களாக... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-05-2025
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக, கோவை குற்றாலம் அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் கோவை குற்றாலம் அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை மற்றும் நாளை மறுநாள் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க இன்று தடை விதிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி, அருவியில் நீர்வரத்து சீராகும் வரை மற்றும் மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலா பயணிகள் கோவை குற்றாலத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் வனத்துறை அறிவித்துள்ளது.
Update: 2025-05-24 08:30 GMT