கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு “ரெட் அலர்ட்”... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-05-2025

கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு “ரெட் அலர்ட்”

கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் (மே.25, 26ம் தேதிகள்) ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி 20 செ.மீ. மேல் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 11-20 செ.மீ. வரை மழைக்கு வாய்ப்பு என்பதால் இரு நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்படுவதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

Update: 2025-05-24 09:52 GMT

Linked news